கிருஷ்ணகிரி, எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையம், ஐதராபாத் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் நேற்று சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சியை, மத்தூர் வட்டாரம் மலையாண்டள்ளி கிராமத்தில் நடத்தியது. இப்பயிற்சியில், வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், முன்னிலை வகித்தார். சிறுதானிய சாகுபடியில் உர மேலாண்மை, மண்வள மேலாண்மை குறித்தும் சிறுதானியங்களின் மதிப்புக்கூட்டுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது