கிருஷ்ணகிரி வட்டம், மகராஜகடை, காப்புக்காடு பகுதிக்குட்பட்ட பெரிய சாக்னாவூர் வனப்பகுதியில், யானைகள் ஊருக்குள் புகா வண்ணம் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இன்று (12.06.2025) நேரில் பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பாக ராகி, சாமை விதைகள் மற்றும் மகாகனி மரக்கன்றுகளை வழங்கினார். உடன் மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.