கிருஷ்ணகிரி: டிஜிட்டல் கல்வியறிவுக்கான இளைஞர்கள், சிறப்பு முகாம்

77பார்த்தது
கிருஷ்ணகிரி: டிஜிட்டல் கல்வியறிவுக்கான இளைஞர்கள், சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் 'என் பாரதத்திற்கான இளைஞர்கள், டிஜிட்டல் கல்வியறிவுக்கான இளைஞர்கள்' சிறப்பு முகாம் பர்கூர் வட்டம், பாலிநாயன பள்ளியில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டார். அப்போது தொழில் நுட்ப கல்லூரி மாணவ மாணவிகளிடையே பேசும்போழுது, கடைகளில் எந்த பொருள் வாங்கினாலும் பற்றுச்சீட்டு வாங்கினால் மட்டுமே தரமான பொருளை நாம் பெற முடியும் என்றும், பல்வேறு இடங்களில் காலாவதியான பொருட்களை விற்கும் நபரிடமிருந்து நம்மை எவ்வாறெல்லாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். 

மேலும் சமுதாயத்தில் ஏமாற்றுபவர்களை, கையும் களவுமாக கண்டறிய பற்றுச்சீட்டு இருந்தால் மட்டுமே தான், நாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறெல்லாம் மாணவர்கள் பயன்படுத்த முடியும் என்றும், தெளிவாக மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பி. கே முருகன் தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் முன்னிலை வகித்தனர். மேலும் திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி