கிருஷ்ணகிரியில் பாட புத்தகங்களை வழங்கிய கலெக்டர்

81பார்த்தது
கிருஷ்ணகிரியில் பாட புத்தகங்களை வழங்கிய கலெக்டர்
2025-26 கல்வி ஆண்டின் முதல் நாள் 02.06.2025 இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, மற்றும் சீருடை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்டக் கல்வி அலுவலர் சரவணன், மாவட்டக் கல்வி ஆய்வாளர் சுதாகர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் லோகநாயகி, மாதேஸ்வரி, பாபு, மேற்பார்வையாளர் அசோக், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆன்ரு மரிய ஜூலி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கண்ணன், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி