கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்த காரப்பட்டு பகுதியில் உள்ள மை பாண்டா உட்ஸ் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சியர் பிப்-20 அன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு தயாரிக்கப்படும் மூங்கில் பொருட்கள் மற்றும் மூங்கில் பண்ணை உற்பத்திப் பொருட்களை அவர் பார்வையிட்டார். மேலும், இந்த பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.