கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஒய். பிரகாஷ் (ஓசூர்), திரு. தே. மதியழகன் (பர்கூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் திரு. எஸ். ஏ. சத்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (30.12.2024), துவக்கி வைத்து 361 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். உடன், மாநகராட்சி ஆணையாளர் திரு. எச். எஸ். ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., ஓசூர் சார் ஆட்சியர் திருமதி. பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. இரா. சக்தி சுபாசினி, முன்னோடி வங்கி மேலாளர் திரு. சரவணன், கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் பா. சிந்தியா செல்வி உள்ளிட்ட பலர் உள்ளனர்.