கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டாரம்பட்டியில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் சில காலம் மட்டுமே செயல்பட்டு தற்போது பூட்டியே கிடக்கிறது. பொதுமக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நூலகத்தைத் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.