கிருஷ்ணகிரி: கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை

63பார்த்தது
கிருஷ்ணகிரி: கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உனிசெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (37/21) என்பவரை கடந்த 21.10.2021-ம் தேதி அவருடைய மனைவி ரூபா (25/21) மற்றும் அவரது உறவினர் தங்கமணி (20/21) ஆகியோர்கள் சேர்ந்து கள்ளக்காதல் விவகாரம் காரணமாக கொலை செய்ததுசம்மந்தமாக இறந்தவரின் சகோதரர் சக்திவேல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போதைய காவல் ஆய்வாளர்கள் சுப்பிரமணியம் மற்றும் நாகராஜ் ஆகியோர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்வழக்கானது ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடித்து நேற்று 25.03.2025-ம் தேதி இவ்வழக்கின் எதிரிகள் தங்கமணி மற்றும் ரூபா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு எதிரிகள் தங்கமணி மற்றும் ரூபா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் எதிரி தங்கமணி சேலம் மத்திய சிறையிலும், ரூபா கோவை மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.