ஊத்தங்கரை: கார் மீது அரசு பஸ் மோதி விபத்து.. குட்கா பறிமுதல்

59பார்த்தது
ஊத்தங்கரை: கார் மீது அரசு பஸ் மோதி விபத்து.. குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஜண்டாமேடு பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இதில் பின்னால் அப்பளம் போல் நெருங்கியது. காரில் இருந்த 2 பேர் இறங்கி தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் கஞ்சா உள்ளிட்ட குட்கா பொருட்கள் 290 கிலோ இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் குட்கா பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி