கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாரத்தில் ஓபக்காவலசை வருவாய் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்புதுறைகளான தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியதுறைசார்ந்த அலுவலர்களின் பங்களிப்போடு நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர், ஊத்தங்கரை முனைவர் கருப்பையா உழவரைத் தேடிச் சென்று வேளாண்மை உழவர் நலத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை, உரமேலாண்மை, பூச்சி நோய் தாக்குதலிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இக்கூட்டத்தில் முன்னோடி விவசாயி சீனிவாசன் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.