கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிங்காரப்பேட்டை ஊராட்சி, புளியானூர் பொதுப்பணித்துறை ஏரிக்கு கடப்பரை ஆற்றுநீரை கொண்டுவர, கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்ட நிதியின் கீழ் ரூ. 98.010 இலட்சம் மதிப்பில் தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.