ஊத்தங்கரை: கார் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

945பார்த்தது
ஊத்தங்கரை: கார் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கே. பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகன் (62) காரில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் உயிரிழந்தார். இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற அருள் (46), விஸ்வநாதன் (58), லிசாந்த் (8) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி