கிருஷ்ணகிரி மவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (60) கூலித்தொழிலாளி. இவருக்கு குடும்ப பிரச்சினையால் கடந்த 15 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுப்பிரமணி நேற்று முன்தினம் செப்-29ம் தேதி அன்று மாலை அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரித்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.