ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா. கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அதன் அடிப்படையில் ஊத்தங்கரை நான்கு முனைச் சந்திப்பில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வெயிலின் தாகத்தைத் தணிக்கக் கூடிய தர்பூசணி, மோர், இளநீர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பழவகைகள் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து சிங்காரப்பேட்டை, அனுமந்திர்த்தம் உள்ளிட்ட பகுதியில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.இ.கே. கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது, நகரச் செயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர்கள் சாமிநாதன், வேங்கன், வேடி, மாவட்ட மருத்துவ அணித் தலைவர் டாக்டர் இளையராஜா, அண்ணா தொழிற்சங்க ஒன்றியச் செயலாளர் வீரமணி, ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.