ஓசூரில் டூவீலர் மீது வேன் மோதி பெண் உயிரிழப்பு

826பார்த்தது
ஓசூரில் டூவீலர் மீது வேன் மோதி பெண் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அருகே சாமந்தூர் அடுத்த மாரநாயக்கனஅள்ளியை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஷோபா (43) ஆகியோர் கடந்த 13-ஆம் தேதி கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலை பத்தலப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷோபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி