கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் நேற்று டூவீலர் மீது மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி மோதியதில் ஊத்தங்கரை அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ராகவன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் உடலை மீட்டு ஊத்தங்கரை ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.