வேப்பனப்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.

2பார்த்தது
வேப்பனப்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.
திருப்பதூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஹரீஷ் (21) என்பவர், வேப்பனப்பள்ளியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை, ஹரீஷ் மற்றும் அவரது நண்பர் புனித குமார் டூவீலரில் சென்றபோது, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். வேப்பனப்பள்ளி போலீசார் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஹரீஷ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி