கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணவாயூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் கே. பி. முனுசாமி வாக்கு சேகரித்தார். அப்போது கிராம பெண்கள் பேருந்து வசதி கோரினர். இதற்கு பதிலளித்த கே. பி. முனுசாமி, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.