தளி அருகே யானை தாக்கி.. ஒருவர் படுகாயம்

50பார்த்தது
தளி அருகே யானை தாக்கி.. ஒருவர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மருப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (69) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆச்சுபாலம் அருகே சென்றபோது அங்குள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த யானை இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணப்பாவை தன் துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் நிலைதடுமாறிய அவர் இருசக்கர வாகனத்துடன் சாலையிலிருந்து தவறி அங்குள்ள பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி