கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் கோவிந்தராசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று தனது தொகுதி மக்களான அகரம், கிராம மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பெண்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக பிடிஓ.விடம் தெரிவிக்கப்பட்டது, அவர் ஆய்வு செய்து குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.