கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோரிப் பள்ளி ஊராட்சி உங்கட்டி முதல் கொத்தக்கோட்டா வரை பழுதடைந்த தார்சாலை பொதுமக்கள் நலன் கருதி சீரமைக்கப்படுகிறது. கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ் 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை சூளகிரி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நாகேஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.