கிருஷ்ணகிரி: அனுமதியின்றி எருது விடும் விழா.. 5 பேர் மீது வழக்கு

498பார்த்தது
கிருஷ்ணகிரி: அனுமதியின்றி எருது விடும் விழா.. 5 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகேயுள்ள கொட்டாவூர் பகுதியில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருது விடும் விழா நடைபெற்றதாக வந்த தகவலின் பேரில் மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி (68) மற்றும் மேலும் 4 பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.