கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா: 5 பேர் மீது வழக்கு

68பார்த்தது
கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா: 5 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி அடுத்துள்ள கங்கசந்திரம் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அனுமதி இன்றி எருதுவிடும் விழா நடத்திய அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (42) உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி