தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு
காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்ததை அடுத்து, கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எம்.சி. ரகு தலைமையில்
காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.