கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில், சுரேஷ்-பாரதி தம்பதியினரின் 6 மாத ஆண் குழந்தையை, தாய் பாரதி கொலை செய்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக குழந்தை இருப்பதாகக் கூறி, குழந்தையை முச்சி அடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கணவர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீசார் பாரதி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுமித்ரா ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.