கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே குப்பச்சிப்பாறை பகுதியில் நடைபெற்ற 26-ம் ஆண்டு ஸ்ரீ மந்த மாரியம்மன் திருவிழாவை ஒட்டி எருது விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, சூளகிரி, குப்பம், ஆம்பூர், பர்கூர், பாகலூர் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் வெற்றி பெற்றவைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.