கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மோடிகுப்பம் கிராமத்தில், விவசாயி ராஜா என்பவரின் தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில், வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த 2 வயது புள்ளிமான் விழுந்து தத்தளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கயிறு கட்டி மானை உயிருடன் மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட மானை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.