ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய்களை ஆய்வு செய்த கலெக்டர்.

285பார்த்தது
ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய்களை ஆய்வு செய்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மாரசந்திரம் கிராமத்தில் உள்ள மாரசந்திரம், அணைகட்டு மற்றும் படேதலவாய் ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில் குமார், உதவி பொறியாளர் சையத் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வு, அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களின் மேலாண்மை மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி