வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கிய கலெக்டர்.

0பார்த்தது
வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், 54 - வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 216-புளியஞ்சேரி மற்றும் 212 நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடர்பான கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அவர் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களையும் வழங்கினார். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி. கீதா ராணி, வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.