கிருஷ்ணகிரி: என்ஜினீயருக்கு மிரட்டல்; தொழிலாளி மீது வழக்கு

51பார்த்தது
கிருஷ்ணகிரி: என்ஜினீயருக்கு மிரட்டல்; தொழிலாளி மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகிலுள்ள பூதிமுட்லு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37) என்ஜினீயர். இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை அளந்து தருமாறு சர்வேயர் ஜெயகாந்தனிடம் கேட்டுள்ளார். அப்போது சர்வேயர், ரூ. 4 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுக்க விரும்பாத சுரேஷ் அதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்சஒழிப்புப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சர்வேயர் ஜெயகாந்தன், உதவியாளர் திலிப் ஆகியோரைக் கைது செய்தனர்.

 பின்னர் அவர்கள் ஜாமீனில் வந்தனர். இந்நிலையில் பூதிமுட்லு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (35) என்பவர் சுரேஷை செல்லிடப்பேசியில் அழைத்து, அந்த வழக்கை வாபஸ் பெற்றுச் சர்வேயர் ஜெயகாந்தனுக்கு ஆதரவாகச் செயல்படுமாறும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.