கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே போலீசார் லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வேப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மசூத் (26) மற்றும் ஸ்ரீநாத் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.