கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி அருகே, தனிப் பட்டா வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் நில அளவையர் வளையாபதி ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். விவசாயி முருகன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.