கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மகாராஜகடை வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. நேற்று, யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறியதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.