மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி நாச்சிகுப்பம், குந்தாரப்பள்ளி கூட் ரோடு ஆகிய இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், கருணாகரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.