வேப்பனப்பள்ளி: நேர நியாய விலை கடை திறந்து வைத்த அமைச்சர்.

305பார்த்தது
வேப்பனப்பள்ளி: நேர நியாய விலை கடை திறந்து வைத்த அமைச்சர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட பெரியதக்கேப்பள்ளி பகுதியில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடையை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.