கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் k. திப்பனபள்ளியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ.வும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலாளருமான பி. முருகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.