கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவியை, மடத்தூரைச் சேர்ந்த ஆனந்த் (28) கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தரப்பில் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.