கூடங்குளத்தில் 4 புதிய அணு உலைகளின் திட்டச் செலவு 55 சதவீதம் உயர்வு

1504பார்த்தது
கூடங்குளத்தில் 4 புதிய அணு உலைகளின் திட்டச் செலவு 55 சதவீதம் உயர்வு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 அணு உலைகளுக்கான திட்டச் செலவு 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3, 4, 5 மற்றும் 6-வது அலகுகள் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 3 மற்றும் 4-வது அலகுகளுக்கான திட்டச் செலவு ரூ.68,893 கோடியாகவும், 5 மற்றும் 6-வது அலகுகளுக்கான செலவு ரூ.69,638 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி