இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறையை சீர்படுத்த ‘Know Your Vehicle (KYV)’ என்ற புதிய நடைமுறை நவம்பர் 1 முதல் மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது. சில லாரி ஓட்டுநர்கள் கார்களுக்கான ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி குறைவான கட்டணம் செலுத்தி வந்ததைத் தடுக்கவே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு வாகனமும் அதன் உண்மையான வகைக்கு ஏற்ப சரிபார்க்கப்படும்.