நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எல். முருகன், ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் இணைந்து தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்ட இவர், 2020-ல் தமிழக
பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான முருகன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.