லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 41வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

0பார்த்தது
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 41வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
2005ல் 'ஜயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தில் உள்ள இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பான் இந்தியா நாயகியாகவும் ஜொலிக்கும் நயன்தாரா இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.