திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை (டிச.3) கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி தந்ததை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்துாணிலும் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.