அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியின் காரணமாக, வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி வாக்கில் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் தாமதமானாலும், ஜூன் 5-ம் தேதிக்குப் பிறகு இந்த பருவமழை தீவிரமடையும் என்றும் அவர் கணித்துள்ளார்.