அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொலைச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சிபுரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, சேலம் ஆகிய இடங்களில் நடந்த கொலை சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக கொலைகள் நடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் காவல்துறை கைகள் கட்டப்பட்டதுபோல தவெக ஆட்சியிலும் நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.