தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'பள்ளி மாணவர் அடித்துக் கொலை, விவசாயி வெட்டிப் படுகொலை, இளைஞர் தலை துண்டித்து கொலை என நீண்டுள்ளது. யாருக்குமே பகல், இரவென எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்' என விமர்சித்துள்ளார்.