உத்தரப் பிரதேசத்தில் காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மிர்சாபூர், கத்ரா கோட்வாலியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் சிங், நேற்று (மார்ச் 11) காலை வழக்கம் போல் தனது நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.