முன்னணி நடிகர்களுக்கு வசூலில் பங்கு

19பார்த்தது
முன்னணி நடிகர்களுக்கு வசூலில் பங்கு
முன்னணி நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் வருவாயில் பங்கு என்ற அடிப்படையில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் இன்று (நவ., 09) நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் புதிய முடிவை எடுத்துள்ளனர்.