அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், அதிமுகவில் இணைந்தார். முன்னதாக இந்தியா ஜனநாயக கட்சி (IJK)யில் இருந்து விலகியிருந்த லீமா ரோஸ், தற்போது அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அவரது மகன் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறார். மேலும், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெகவில் உள்ளார்.