இடதுசாரி வேட்பாளர்கள் 15ஆம் தேதி அறிவிப்பு - பெ.சண்முகம் தகவல்

3875பார்த்தது
இடதுசாரி வேட்பாளர்கள் 15ஆம் தேதி அறிவிப்பு - பெ.சண்முகம் தகவல்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர்கள் வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இல்லை. இடைத்தேர்தல் என்பதால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். 3 அணிக்கும் எதிராகவே நாங்கள் இந்த நிலைபாட்டை எடுத்துள்ளோம். தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும் என்றார்.

தொடர்புடைய செய்தி