'தி லெஜண்ட்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தை 'மான் கராத்தே', 'கெத்து' ஆகிய படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குவதாக இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.